தமிழ் முற்போக்கு கூட்டணி – இ.தொ.கா கைகோர்ப்பு!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானும் பங்கேற்றுள்ளார்.
ஹட்டன்,என்பீல்ட்,ஒட்டரி பிரதேசத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அதன் திறப்பு விழா இன்று நடைபெறுகின்றது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டுள்ளனர். அரசியலில் எதிரும் புதிருமாக செயற்பட்டு வரும் இ.தொ.கா , முற்போக்கு கூட்டணியின் அரசியல் பயணத்தில் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் ஜீவன் தொண்டமான் கலந்து கொண்டிருந்தார்.
-(3)




