தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களுடன் நீதி அமைச்சர் கலந்துரையாடல்!
யாழ்ப்பாணம் சென்றுள்ள நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, நீண்ட காலமாக சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
சில தமிழ் அரசிகள் கைதிகள் அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள 34 பேரையும் விடுவிக்க இந்த சந்திப்பின்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சாதகமான நிலைப்பாட்டியே பின்பற்றி வருவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதன் போது தெரிவித்தார்.
இதேவேளை சிறையில் உள்ளவர்களின் வழக்கு நிலைமைகள் குறித்து சட்டமா அதிபருடன் தொடர்ந்து கலந்துரையாடி விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண ஆளுநரின் செயலாளர் வாகீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-(3)




