செய்திகள்

திலினி பிரியமாலி விவகாரத்தில் பிக்கு ஒருவர் கைது!

நிதி மோசடி குற்றச்சாட்டுடன் தொடர்புடைய திலினி பிரியமாலியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரளை சிறிசுமண தேரரே இவ்வாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திலினி பிரியமாலி ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த பிக்கு கைதாகியுள்ளார்.
-(3)