செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் இன்று பேரணி

அரசாங்கத்தின் அடக்குமுறைகளை கண்டித்து இன்று கொழும்பில் கண்டன பேரணியும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளன.

அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் காலி முகத்திடல் போராளிகள் குழுவினால் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பிற்பகல் 3 மணியளவில் மருதானை பகுதியில் இருந்து பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த பேரணியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இணைந்துகொள்ளவுள்ளார்.

எவ்வாறாயினும், இன்றைய போராட்டத்தில் தமது கட்சி இணைந்து கொள்ளாது என ஜே.வி.பி அறிவித்துள்ளது.

-(3)