ல்லை நிர்ணயம் தொடர்பில் தேசிய குழு
உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பில் தேசிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பொறுப்பான பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு நவம்பர் முதலாம் திகதியிலிருந்து அடுத்த ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி வரை செயற்படவுள்ளது.
உள்ளூராட்சிமன்ற தேர்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ் இந்த தேசிய குழுவை நியமிப்பதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான இந்தக் குழுவில் ஜயலத் ரவி திஸாநாயக்க, W.M.M.R. அதிகாரி, கே.தவலிங்கம் மற்றும் ஐ.ஏ ஹமீட் ஆகியோர் உறுப்பினர்களாகவுள்ளனர்.
-(3)




