செய்திகள்

கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் இன்று சிரமதானப் பணிகள்

கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதானப் பணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை பணிக் குழுவினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.இதற்கமைய சிரமதான பணிகளில் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் முதன்மை செயற்பாட்டாளர் தியாகு , நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் ,அரசியல் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.இன்று காலை மாவீரர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி அகவணக்கம் செலுத்தி சிரமதானப் பணிகள் ஆரம்பமானது.(15)