செய்திகள்

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸாரினால் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களையும் இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இளவாலை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீர் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரிடம் போதைப்பொருள் மீட்கப்பட்டது.அதேவேளை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளவாலை பகுதியை சேர்ந்த இளைஞனை சோதனையிட்ட போதும் அவரிடம் இருந்தும் போதைப்பொருள் மீட்கப்பட்டது.(15)