”பரீட்சைகள் திட்டமிட்டப்படி நடக்கும்”
புலமைப் பரிசில் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் திட்டமிட்டப்படி குறித்த தினங்களில் நடக்கும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமயந்த தெரிவித்துள்ளார்.
எக்காரணம் கொண்டும் பரீட்சைகள் மீண்டும் பிற்போடப் படமாட்டாது என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அடுத்த வருட முதல் பாடசாலை தவணை ஆரம்பிக்கும் போது திட்டமிட்டபடி பாடப் புத்தகங்களை வழங்க தேவையான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் . இதற்காக இந்திய கடனுதவி கிடைக்கப் பெற்றுள்ளது என்றும் கூறினார்.




