செய்திகள்
அம்பாறை – திருக்கோவில் பகுதியில் பாடசாலையொன்றில் இரண்டு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு
அம்பாறை – திருக்கோவில் பகுதி, பாடசாலையொன்றில் இரண்டு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய மாணவர் காயமடைந்ததுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை 13 வயதான மாணவர் சம்பவத்தில் உயிரிழந்தவர் என்றும் அவரது உடல் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.(15)




