செய்திகள்
மஹிந்தவை பிரதமராக்கும் கூட்டம் இன்று குருநாகலையில்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் இணைந்து நடத்;தும் கூட்டம் இன்று குருநாகலையில் நடைபெறவுள்ளது.
தினேஷ் குணவர்தன , வாசுதேவ நாணயக்கார , விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்டவர்களின் ஏற்பாட்;டில் குறித்த கூட்டம் நடைபெறவுள்ளதுடன் இதில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பிக்கள் பலரும் கலந்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில மாதங்களாக ராஜபக்ஷவை பிரதமர் வேட்;பாளராக களமிறக்குமாறு வலியுறுத்தி இவர்களால் கூட்டம் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




