செய்திகள்

மூன்றாவது குடியரசு யாப்பை அமைக்க ஐ.தே.க தீர்மானம்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் பின்னர் 3ம் குடியரசு யாப்பை தயாரிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்;சி தீர்மானித்துள்ளதாக வெளிவிவகாரா அமைச்சர் மங்கள் சமரவீர தெரிவித்துள்ளார்.
தேர்தலின் போது தமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயம் உள்ளடக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி அடுத்த பொதுத் தேர்தலுக்கு பின்னர் அமையும் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றி புதிய யாப்பை அமைக்க நடவடிக்கையெடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.