செய்திகள்

இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பலின் மாலுமியை காணவில்லை!

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கனடா செல்ல முயன்ற போது, வியட்நாமில் மீட்கப்பட்ட  புகலிடக் கோரிக்கையாளர்கள் மத்தியில் அவர்கள் பயணித்த கப்பலின் மாலுமி இருக்கவில்லை என மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த கப்பல் மூழ்கிய சந்தர்ப்பத்தில் அதனை மாலுமி கைவிட்டுச் சென்றுள்ளதாக மீட்கப்பட்ட இலங்கையர்களை மேற்கோள் காட்டி வியட்நாம் ஊடகங்கள் செய்தி  வௌியிட்டுள்ளன.

இலங்கையிலிருந்து குழுவாக மியன்மாருக்கு பயணித்ததாகவும் அங்கிருந்து கப்பலொன்றின் மூலம் கனடா செல்ல முயற்சித்ததாகவும் குறித்த கப்பலில் இருந்த இலங்கையர் தெரிவித்துள்ளார்.

303 இலங்கையர்களும் ஒன்றாக மியன்மாருக்கு  பயணித்தார்களா அல்லது குழுக்களாக பிரிந்து  பயணித்தார்களா என்பது தௌிவின்றி உள்ளதுடன், அது தொடர்பிலான  விசாரணைகள் கிடப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-(3)