செய்திகள்

யாழில் 15 வயது சிறுமியுடன் குடும்பமாக வாழ்ந்து வந்த 22 வயது இளைஞன் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இளைஞன் ஒருவர் , சிறுமியொருவரை அழைத்து வந்து குடும்பமாக வாழ்கின்றார் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய 15 வயது சிறுமியுடன் குடும்பமாக வாழ்ந்து வந்த 22 வயதான இளைஞன் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.அத்துடன் சிறுமியை மீட்டு , மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவ மனையில் பொலிஸார் அனுமதித்துள்ளனர்.(15)