செய்திகள்

கொழும்பில் துப்பாக்கிச் சூடு: மன்னாகண்ணா காயம்!

கொழும்பு கிரேண்ட்பாஸ் பகுதியில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இதில் அந்தப் பிரதேசத்தை சேர்ந்த பிரபல பாதாளக் குழு உறுப்பினரான மன்னா கண்ணா என்பவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த குழுவொன்று இவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
-(3)