செய்திகள்

வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது!

2023 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 121 வாக்குகளால் நிறைவேறியுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி ஜனாதிபதியினால் வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 15 ஆம் திகதி முதல் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடத்தப்பட்டு, இன்று மாலை அதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும் குழுக்கள் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களித்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
இதன்படி ஆதரவாக 121 பேரும், எதிராக 84 பேரும் வாக்களித்தனர்.

-(3)