யாழ்.வல்லைப் பாலத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் நீரேரியில் தவறி விழுந்து சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் நீரேரியில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள நிலையில், இன்றைய தினம் புதன்கிழமை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞரும் அவரது நண்பர்கள் சிலரும் இணைந்து வல்லை பாலத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை வேளையில் தூண்டில் போட்டு மீன் பிடியில் ஈடுபட்டுள்ளனர்.இதன் போது இளைஞன் பாலத்தில் இருந்து நீரேரிக்குள் தவறி விழுந்துள்ள நிலையில் இளைஞரைத் தேடும் பணியில் அச்சுவேலி பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை கடற்படையினரின் சுழியோடிகளால் இளைஞன் சடலமாக கண்டெடுத்துள்ளனர்.புத்தூர் கலைமதி கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் திலக்ஸன் (வயது 19) எனும் இளைஞனே சடலமாக ண்டெடுக்கப்பட்டுள்ளார்.(15)




