செய்திகள்

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் யாழ். பொது நூலகத்தினை பார்வையிட்டர்

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண பொது நூலகத்தினை பார்வையிட்டர்.அதன்போது, யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் உயர்ஸ்தானிகரை வரவேற்றதோடு யாழ்ப்பாண பொது நூலகத்தின் சிறப்புகள் மற்றும் வரலாற்று ஆவணங்களை காண்பித்தார்.

இதேவேளை யாழ் மாநகர முதல்வருக்கும் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்குமிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.உயர்ஸ்தானிகரின் விஜயத்தையடுத்து யாழ் மாநகர சபை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.(15)