செய்திகள்
யாழ்ப்பாணம் – கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுபாட்டை இழந்த நிலையில் அருகில் உள்ள மின் கம்பத்தினுடன் மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கந்தர்மடத்தை சேர்ந்த க.செறிஸ்டன் (வயது 49) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.விபத்து தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள யாழ்.பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.(15)




