செய்திகள்
மூன்றாவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தை மரணம்: கொழும்பில் சம்பவம்!
கொழும்பில் கிராண்ட்பாஸ் சமகிபுர தொடர்மாடி குடியிருப்பில் மூன்றாவது மாடியில் இருந்து குழந்தையொன்று தூக்கி வீசப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.
ஒன்றரை வயது குழந்தையே இவ்வாறு தூக்கி வீசப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மனநோயாள் பாதிக்கப்பட்ட குழந்தையின் மாமாவால் குழந்தை மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
-(3)




