செய்திகள்

கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி

யாழ்ப்பாணம், கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்திற்கு முன்பாக இன்று காலை சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் இவ்வாறு அஞ்சலி செலுத்தினர்.

குறித்த மாவீரர் துயிலும் இல்லம் இருந்த பகுதியில் தற்போது இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-(3)