செய்திகள்

இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் இன்று கொழும்பில் திருமண பந்தத்தில் இணைந்தனர்

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் இன்று கொழும்பில் நடைபெற்ற வைபவங்களில் அசாதாரணமான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.நேற்று கண்டி பல்லேகலவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடிய இலங்கை அணியில் இவர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதேவேளை கண்டி, பல்லேகலவில் புதன்கிழமை திட்டமிடப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அடுத்த போட்டிக்கு தயாராவதற்காக கிரிக்கெட் வீரர்கள் இன்று மாலைக்குள் அணிக்குத் திரும்பவுள்ளனர்.கசுன் ராஜித, சரித் அசலங்க மற்றும் பத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் கொழும்பில் மூன்று தனித்தனி இடங்களில் திருமணம் செய்து கொண்டனர்.(15)