செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்ந்து வந்த 15 வயதுடைய சிறுவன் உயிரிழப்பு

ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்ந்து வந்த 15 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார்.குறித்த சிறுவனுக்கு காய்ச்சல் என யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , வைத்திய பரிசோதனையில் சிறுவனுக்கு கிருமி தொற்று ஏற்பட்டு இருந்தமை கண்டறியப்பட்டது.இந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறுவனே அவ்வாறு உயிரிழந்துள்ளார்.இதேவேளை யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை ஊசி மூலம் நுகர்ந்ததால் , கிருமி தொற்று ஏற்பட்டு , உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.()15)