செய்திகள்
யாழ். அனலைதீவு பகுதியில் கடலட்டை பண்ணைகளை உடன் அகற்றுமாறு கோரி கடற்றொழிலாளர்கள் போராட்டம்
யாழ். ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட அனலைதீவு – பருத்தித்தீவு பகுதியில் கடற்றொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகளை உடன் அகற்றுமாறு கோரி அப்பகுதி கடற்றொழிலாளர்கள் நேற்று புதன்கிழமை முதல் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை நேற்று புதன்கிழமை முதல் கடலட்டை பண்ணைகளை அகற்றும் வரை தமது போராட்டம் தொடரும் என அனலைதீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.(15)




