செய்திகள்

சுமார் ஒரு தசாப்தத்தின் பின்னர் இலங்கையில் வளிமண்டலத்தில்அதிகளவான தூசுத் துகள்கள் நேற்றைய தினம் படிவு

சுமார் ஒரு தசாப்தத்தின் பின்னர் நாட்டின் வளிமண்டலத்தில், அதிகளவான தூசுத் துகள்கள் நேற்றைய தினம் படிந்ததாக மத்திய சுற்றாடல் அதிகாரச் சபை தெரிவித்துள்ளது.இந்நிலையில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தூசுப் படிமங்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில், 60 சுற்றுப்புறக் காற்று தரக் கண்காணிப்பு நிலையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.அரச நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக மத்திய சுற்றாடல், அதிகார சபைத் தலைவர் சுபுன் எஸ். பத்திரகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை மெண்டௌஸ் சூறாவளியினால் இந்தியாவில் இருந்து தூசுத் துணிக்கைகள் அதிகளவில் நாட்டில் சூழ்ந்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில், அதிக குளிருடனான வானிலை நிலவுகின்றது..(15)