மாண்டஸ் புயல் – யாழ். மாவட்டத்தில் வாழை மரங்கள் உட்பட பல்வேறு மரங்கள் முறிவு
மாண்டஸ் புயல் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் திருகோணமலைக்கு வடகிழக்கே 240 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது.இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு கரையோரத்தின் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள் டிசம்பர் 09 ஆம் தேதியின் போது மிகவும் பலத்த காற்று மற்றும் பலத்த மழையுடன் மிகவும் உயரமான அலைகள் எழ அதிக சாத்தியங்கள் காணப்படுகின்றது.இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவில் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் வட தமிழ்நாடு-நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை கடக்க அதிக வாய்ப்புள்ளது.
இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக யாழ். மாவட்டத்தில் பல்வேறு மரங்கள் முறிந்துள்ளதுடன் விவசாய நிலங்களில் உள்ள வாழை மரங்களும் முறிந்துள்ளன.இவ் சூறாவளி தாக்கத்தால் நேற்று இரவு யாழ். மத்திய வீதி, பலாலி வீதி மற்றும் கந்தர்மடச் சந்தியினை இணைக்கும் பிரதான வீதியில் சமண்டலை மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.
மேலும் நீர்வேலி, கோப்பாய், புன்னலைக்கட்டுவன், புத்தூர், வசாவிளான், உரெழு உள்ளிட வாழைத்தோட்டங்களில் உள்ள வாழைமரங்களும், வாழைக்குலைகளும் பெரும் அளவு முறிந்து காணப்படுகின்றன.இதனால் விவசாயிகள் மிக அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.(15)





