பாலியல் தொல்லை – பாலியல் இலஞ்சம் பெறல் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையாகும் சட்டம்!
பாலியல் தொல்லைகள், பாலியல் தொந்தரவுகள், பாலியல் இலஞ்சம் மற்றும் குறித்த குற்றச் செயல்களுக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் வகையில் தற்போதுள்ள சட்ட ரீதியான ஏற்பாடுகளை வலுப்படுத்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டள்ளது.
பாலியல் தொல்லைகள், அடிப்படை மனித உரிமை மற்றும் சுதந்திரம் மீறப்படுவதுடன், அதனுடன் தொடர்புடைய ஏற்பாடுகள் தண்டனைச் சட்டக்கோவையின் 345 ஆவது உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த குற்றத்திற்காக தண்டனை வழங்குவதற்கு சட்டத்தில் ஏற்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பினும், இப்பிரச்சினை தொடர்ந்து நிலவுகின்றமை கண்டறிப்பட்டுள்ளது.
அதனால், பாலியல் தொல்லைகள் மற்றும் அனைத்துவித பாலியல் தொந்தரவுகளைக் குற்றச் செயலாகக் கருதுகின்ற உறுப்புரையை தண்டனைச் சட்டக்கோவையில் உட்சேர்ப்பதற்கும், அதற்குக் கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கும் மற்றும் பாலியல் இலஞ்சத்தை குற்றமாக்குவதற்கும் புதிய உறுப்புரைகளை உட்சேர்த்து தண்டனைச் சட்டக்கோவையைத் திருத்தம் செய்வதற்கு இயலுமாகும் வகையில் சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
-(3)




