செய்திகள்

இலங்கையில் மின்வெட்டு நேரத்தை மேலும் அதிகரிக்க வேண்டிய நெருக்கடி நிலை

இலங்கையில் மின்வெட்டு நேரத்தை மேலும் அதிகரிக்க வேண்டிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.நீர்மின் உற்பத்தி நிலையங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைந்த வருவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சபை சுட்டிக்காட்டியுள்ளது.நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 70% ஆகக் குறைந்தால் மின்சார விநியோகம் நெருக்கடியாகிவிடும். அவ்வாறான நிலை ஏற்பட்டால் மின்வெட்டு காலத்தை அதிகரிக்க வேண்டிவரும் என்று மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்காலத்தில் நாளொன்றுக்கு ஏழு அல்லது எட்டு மணிநேரம் மின்வெட்டு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.நிலக்கரி பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் இந்த நிலை ஏற்படக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.(15)