சுனாமி அனர்த்தம் எற்பட்டு 18 வருடங்கள்: பல பாகங்களிலும் நினைவு தின நிகழ்வுகள்
2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி காலை வேளை சுனாமி நாட்டை தாக்கியது. இதில் சுமார் 40 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதனை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் நினைவு தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிரதான நிகழ்வு நிகழ்வு காலி சுனாமி நினைவிடத்திற்கு அருகில் இடம்பெறவுளளது.
இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று காலை 9.25 இருந்து 9.27 வரை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
சுனாமி ஏற்பட்டதன் பின்னர் 2005 ஆம் ஆண்டில் இலங்கையில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டது.
இதன்படி அனர்த்தங்களை முன்கூட்டியே அறிவித்தல், அனர்த்தங்களின் போது பாதிப்புக்களை குறைப்பதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்தல் என்பன நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
அனர்த்தங்கள் பற்றி அடிக்கடி தெளிவுபடுத்தும் வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.




