செய்திகள்

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவத்தினர் அபகரித்துள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தி ல் ஈடுபட்டுள்ளனர்.குறித்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், புதுக்குடியி ருப்பு பிரதேச சபை உறுப்பினர் விஜயகுமார்,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது எமது நிலம் எமக்கு வேண்டும், இராணுவமே வெளியேறு, எங்கள் சொந்தக் காணிகளுக்குள் இராணுவ முகாம் வேண்டாம் உள்ளிட்ட வாசங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறும் , கோசங்களை எழுப்பிவாறும் மக்கள் கேப்பாப்புலவு இராணுவ முகாமின் பிரதான வாயிலின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.(15)