கிளிநொச்சி உதய நகர் பகுதியில் 22 வயது பெண் ஆறு பேர் கொண்ட குழுவினரால் கடத்தல்
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உதய நகர் பகுதியில் வாசித்து வரும் 22 வயது பெண் ஒருவரை ஆறு பேர் கொண்ட குழு நேற்று புதன்கிழமை மாலை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்றுள்ளது.சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசாரக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
உதயநகர் பகுதியில் வாசிக்கும் குறித்த பெண் ஆண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் குறித்த காதலன் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என தெரிந்த நிலையில் அவரை திருமணம் செய்ய மறுத்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த குறித்த காதலன் போதை தலைக்கேறிய நிலையில் குறித்த யுவதியின் வீட்டுக்குள் புகுந்த அடாவடிக் கும்பல் தாய் மற்றும் தம்பியை தாக்கிவிட்டு யுவாதியை மூச்சக்கர வண்டியில் கடத்தி சென்றுள்ளது.(15)




