யாழ். கோட்டையில் சீனத் தூதரக அதிகாரிகள்!
யாழ்ப்பாணக் கோட்டைக்கு இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவினர் சென்று பார்வையிட்டுள்ளனர்.
நேற்று மாலை இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹூ வெய், சீனத் தூதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்று பார்வையிட்டனர்.
இந்த விஜயத்தின் போது, அவர்கள், கோட்டை தொடர்பான விடயங்களை அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்து கொண்டனர்.
குறித்த விஜயம் சுற்றுலா ரீதியானது என தெரிவிக்கப்படுகின்ற நிலையில், கோட்டைக்கு பொறுப்பான அலுவலர்களோ உத்தியோகஸ்தர்களோ பிரசன்னமாகி இருக்கவில்லை.
-(3)




