13 கட்சிகள் இணைந்த புதிய கூட்டணி உதயம்!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, டலஸ் அழகப்பெரும மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரின் தலைமையிலான பாராளுமன்ற குழுக்களினால் புதிய அரசியல் கூட்டணியொன்று அமைக்கப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திரன முன்னணி, உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துறு ஹெல உறுமய, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி, டலஸ் அழகப்பெருமன தலைமையிலான உத்தர லங்கா சபை உள்ளிட்ட 13 கட்சிகள் இந்த புதிய கூட்டணியில் இணைந்துள்ளன.
கடந்த காலங்களில் அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் சுயாதீனமாக இயங்கும் குறித்த கட்சிகளின் 35 பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கின்றனர்.
சுதந்திர மக்கள் கூட்டணி என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த கூட்டணியின் சின்னமாக ஹெலிகப்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் இந்த புதிய கூட்டணி போட்டியிடவுள்ளது.
-(3)




