செய்திகள்

எரிபொருள் நெருக்கடியால் களனிதிஸ்ஸவில் மின் உற்பத்தி நிறுத்தம்!

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று நள்ளிரவு முதல் இந்த மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெப்தா எரிபொருள் இல்லாமையே இதற்கு காரணம் என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 165 மெகாவோட் மின்சாரம் இழக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-(3)