ஈஸ்டர் தாக்குதல்: நஷ்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி, பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு!
2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு உயர்நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன, தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சிசிர மெண்டிஸ் ஆகியோருக்கு அறிவித்துள்ளது.
தாக்குதல் இடம்பெறவுள்ளதாக புலனாய்வுத் தகவல் கிடைத்திருந்த போது அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன, தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சிசிர மெண்டிஸ் ஆகியோர் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாவையும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு தலா 75 மில்லியன் ரூபாவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபாவும், முன்னாள் தேசிய புலனாய்வுத் தலைவர் சிசிர மென்டிஸ் தனது தனிப்பட்ட பணத்திலிருந்து 10 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
-(3)




