டெங்கு தீவிரம்: கொழும்பு மக்களுக்கு எச்சரிக்கை!
கொழும்பில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இம்மாதம் இரண்டாவது வாரத்தில் மாத்திரம் 2,030 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கம்பஹா மாவட்டத்தில் 417, புத்தளம் மாவட்டத்தில் 257, களுத்துறை மாவட்டத்தில் 123, அம்பாறை மாவட்டத்தில் 107 மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 103 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த வருடம் இதுவரை 4,172 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
-(3)




