செய்திகள்

மாணவர்கள் பயணித்த பஸ் விபத்து: 7 பேர் மரணம்!

கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து கல்வி சுற்றுலாவிற்கு சென்ற பஸ் நுவரெலியா, நானுஓய –  ரதெல்ல பகுதியில் விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  30 பேர் காயமடைந்துள்ளனர்.

வேன் ஒன்றுடன் குறித்த பஸ் மோதியுள்ளதுடன் முச்சக்கரவண்டியொன்றும் விபத்திற்குள்ளானது.

விபத்திற்குள்ளான பஸ் பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.

வேனில் பயணித்த 6 பேரும் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவரும் விபத்தில் பலியாகியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-(3)