செய்திகள்

பாராளுமன்றத்தின் கூட்டத் தொடரை முடிவுக்கு கொண்டு வர ஜனாதிபதி தீர்மானம்!

தற்போதைய பாராளுமன்றத்தின் 3 ஆவது கூட்டத் தொடரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி புதிய கூட்டத் தொடர் பெப்ரவரி 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அன்றைய தினத்தில் தேசியப் பிரச்சினைக்கான தீர்வுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி விசேட அறிவித்தல்களை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

-(3)