வான் மோதியதில் இரு மாணவிகளுக்கு காயம் (வீடியோ, படங்கள்)
இலங்கையின் மத்திய மாகாணத்தின் கொட்டகலை நகரில் இடம்பெற்ற வீதி விபத்தில் 13 வயதுடைய இரு மாணவிகள் காயமடைந்துள்ளனர்.
கொட்டகலை நகரில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள பாதுகாப்பான வீதிக் கடவையில் சென்று கொண்டிருந்த குறித்த இரு மாணவிகள் மீதும் வான் ஒன்று மோதியதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த இரு மாணவிகளும் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்து 09.05.2015 இன்று காலை 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனா்.
அட்டன் பகுதியிலிருந்து தலவாக்கலையை நோக்கி வேகமாக சென்ற வான் ஒன்றே இவ்வாறு குறித்த மாணவிகள் மீது மோதியுள்ளது.
காயமடைந்த இரு மாணவிகளும் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் 7 ஆம் தர வகுப்பில் கல்வி கற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
விபத்தை அடுத்து சந்தேக நபரான வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.










