இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் கருப்பு தினமான அனுஸ்ரிக்கின்றோம்
இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் கருப்பு தினமான அனுஸ்ரிக்கின்றோம்.எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.எனினும் சுதந்திரம் இல்லாத நாட்டில் சுதந்திர தினம் எதற்காக?என்பதன் அடிப்படையில் தமிழர்களாகிய நாங்களும் குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் அன்றைய நாளை கறுப்பு தினமாக அனுஷ்டிக்க இருக்கின்றோம் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் ஒன்றிய தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மன்னாரிற்கு வருகை தர உள்ளனர்.இதன் அனைவரும் அவர்களுடன் இணைந்து கொள்ள வேண்டும்.காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து எங்களுக்கு ஒரு முடிவு கிடைக்க வேண்டும்.காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் சுமார் 14 வருடங்களாக வீதியில் நின்று போராடி வருகிறோம்.எங்களுடைய போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் பல்கலைக்கழக மாணவர்கள் எங்களுடன் இணைந்து கொள்கிறார்கள்.
எனவே சுதந்திர தினத்தை முன்னிட்டு எமது கருப்பு தின போராட்டத்திற்கு அனைத்து தரப்புகளும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.எதிர்வரும் 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் எமது கருப்பு தின போராட்டம் இடம் பெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(15)




