செய்திகள்

பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 25 பேர் பலி!

பாகிஸ்தான் பெஷாவரில் பகுதியில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பொலிஸ் குடியிருப்புகளை அதிகளவில் கொண்ட அந்தப் பகுதியில் உள்ள பள்ளிவாசலொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வழமைப் போன்று திங்கட்கிழமை நண்பகல் பலர் பள்ளியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது அங்கு குண்டு வெடித்துள்ளது.

இதன்போது பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும், இவர்களில் 25 பேர் வரையிலானோர் உயிரிழந்துள்ளதாகவும் பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்தப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள பாதுகாப்பு தரப்பினர் மேலும் குண்டுதாரிகள் அங்கு இருக்கின்றனரா என்று தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

-(3)