செய்திகள்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக மைத்திரி அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடுவேன் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் தான் போட்டியிடுவேன் என்றும், அதில் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு தற்போது பல்வேறு இடையூறுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், எந்த தடைகள் வந்தாலும் போட்டியிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

-(3)