வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: வடக்கு, கிழக்கில் பலத்த மழைக்கான எச்சரிக்கை!
வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் இன்று(01) முற்பகல் நாட்டின் கிழக்கு கடற்பிராந்தியத்தை அண்மிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன் காரணமாக வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் 150 மில்லிமீட்டர் வரையிலான பலத்த மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு, வட மத்திய, வட மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பலத்த காற்று வீசுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதேவேளை, தென்கிழக்கு, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால், நாளை(02) வரை குறித்த கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-(3)




