யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்த வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியின் இறுதி நாள் இன்று
தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு கோரி யாழ். பல்கலைக்கழகம் மாணவர்கள் ஏற்பாடு செய்த வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியின் இறுதி நாளான இன்றையதினம் பேரணி வெருகல் சித்திரவேலாயுத சாமி கோவில் இருந்து நகர ஆரம்பித்துள்ளது.பல்கலைக்கழக மாணவர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பொது அமைப்புக்கள் என பல்வேறு தரப்பினரும் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழர் தாயகத்தை மீட்போம், சுயநிர்ணயத்தை காப்போம் எனும் கோசங்களுடன் நேற்றைய தினம் திருகோணமலையை சென்றடைந்த பேரணிக்கு அங்கு கூடியிருந்த தமிழ் உணர்வாளர்கள் உற்சாக வரவேற்பளித்து வரவேற்றதோடு, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் எழுச்சிப் பேரணியுடன் இணைந்துகொண்டனர்.(15)





