செய்திகள்

திட்டமிட்டபடி தேர்தலை நடத்த ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி!

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை தொடருமாறு உயர்நீதிமன்றம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.

தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யபட்டுள்ள மனு மீதான விசாரணை இன்று முன்னெடுக்கப்பட்ட போதே நீதிமன்றம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

இதன்படி மார்ச் 9 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை தேர்தலை நடத்தும் தீர்மானத்தை இடைநிறுத்துமாறு கோரும் மனுக்கள் மீதான விசாரணைகள் உயர்நீதிமன்றத்தினால் எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

-(3)