மகிந்தவை மீண்டும் பிரதமராக்க முயற்சி!
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக்க பொதுஜன பெரமுனவினர் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக வருமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியறுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நாட்டில் வன்முறை மோதல்கள் மற்றும் அரசியல் ஸ்திரமின்மைக்கு மத்தியில், கடந்த ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி மகிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்திருந்தார்.
இதேவேளை இந்த வார தொடக்கத்தில் ஒரு தொலைக்காட்சி நேர்காணலின் போது, மீண்டும் அரசியலில் களமிறங்கவுள்ளதாக பசில் ராஜபக்ஷவும் அறிவித்திருந்தார்.
மக்களின் நலனுக்காக அமெரிக்க குடியுரிமையை துறக்க தயாராக இருப்பதாகவும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-(3)




