செய்திகள்

தபால் வாக்களிப்பு ஒத்தி வைக்கப்படவில்லை என்கிறது ஆணைக்குழு!

தபால் மூல வாக்களிப்பு உரிய திகதிகளில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தபால் மூலமானவாக்களிப்பிற்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான நிதி கிடைக்காததால் தபால் மூலமான வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அறிவித்திருந்தது.

எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பை நடத்த தேசிய தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டிருந்த போதும் குறித்த திகதிகளில் தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுகளை விநியோகிக்க முடியாது ஆணைக்குழு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-(3)