செய்திகள்

கொழும்பில் மாபெரும் போராட்டத்திற்கு ஜே.வி.பி திட்டம்: நீதிமன்றம் தடையுத்தரவு

உள்ளூராட்சி தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஜே.வி.பி திட்டமிட்டுள்ளது.

இதன்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கட்சி ஆதரவாளர்கள் அனைவரும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தப் போராட்டத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த தடையுத்தரவை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

-(3)