செய்திகள்

ஜே.வி.பி ஆர்ப்பாட்டத்தில் 20 பேர் காயம்: ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில்!

ஜே.வி.பியினால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது

அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த 28 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் இரண்டு தடவைகள் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.

-(3)