செய்திகள்

உள்ளூராட்சித் தேர்தல் ஏப்ரல் 25

ஒத்தி வைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தபால் மூல வாக்களிப்பை மார்ச் மாத இறுதியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

-(3)