செய்திகள்

ஏப்ரல் 25 தேர்தல் நடக்குமா? – இன்று முக்கியத் தீர்மானம்!

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இடையில் இன்று(23) கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

இன்று(23) காலை 10 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்போது உள்ளூராட்சி மன்ற தேர்தலின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது.

இதனிடையே, கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இடையிலும் இன்று(23) காலை கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது.

-(3)